உள்ளூர் செய்திகள்
கோவில் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்ட காட்சி.

நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் மரக்கன்று நடும்விழா

Published On 2022-01-27 09:27 GMT   |   Update On 2022-01-27 09:27 GMT
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. சேலம் அருகே உள்ள தீர்த்தமலை சேர்ந்த வைத்தியலிங்கம் என்ற பசுமை சித்தர் மரக்கன்றுகள் நட்டார்.
திருச்செந்தூர்:
மரங்களை வெட்டி காடுகளை அழித்தால் காசு கொடுத்து காற்று வாங்கும் நிலை வரும் என மரக்கன்று நடும் விழாவில் பசுமை சித்தர் கூறினார்.

மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. விழாவில் சேலம் அருகே உள்ள தீர்த்தமலை சேர்ந்த வைத்தியலிங்கம் என்ற பசுமை சித்தர் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:&-

பனைமரங்களை வெட்ட கூடாது என தமிழக அரசு தடை உத்தரவு வரவேற்கத்தக்கது.சாலை விரிவாக்க பணிக்கு மரங்களை வெட்டினால் புதிய மரக்கன்றுகள் நடவேண்டும். காடுகளை அழிக்க கூடாது.

தூய்மையான காற்று கிடைக்க  அதிக அளவு மரங்கள் வளர்க்க வேண்டும். அப்போதுதான் அதிக மழையும்  கிடைக்கும். மரங்கள் அழிந்து கொண்டே போனால் நாம் சுவாசிக்கும் காற்றுக்கு தட்டுபாடு ஏற்படும். விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்படும். கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யக்கூடாது. ஆலய வழிபாட்டால்  மன அமைதி ஏற்படும். நோய் தாக்கம் குறையும். செல்வம் பெருகும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News