உள்ளூர் செய்திகள்
சத்குரு

தேசத்தின் மண்வளத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் - சத்குரு பேச்சு

Published On 2022-01-26 09:27 GMT   |   Update On 2022-01-26 09:27 GMT
குடியரசு தினவிழாவையொட்டி சத்குரு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
கோவை:

கோவை ஈஷா யோகா மையத்தில் 73-வது  குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் முன்பு இவ்விழா நடைபெற்றது. விழாவில்   தேசிய கொடியேற்றி பேசிய சத்குரு பேசியதாவது:-

 தமிழ்மக்கள் அனைவருக்கும் 73-வதுகுடியரசு தின நல்வாழ்த்துக்கள். நம் பாரத தேசம் நாகரீகத்திலும், கலா சாரத்திலும் உலகிலேயே மிகவும் பழமையானது; ஈடு இணையற்றது. பொதுவாக ஒரு நாடு வளம் பெற வேண்டுமென்றால், அந்நாட்டில் உள்ள மண் வளமாக இருக்க வேண்டும். மண்ணில் இருக்கும் உயிர்சக்தி போய்விட்டால், ஒரு நாடு வளமான நாடாக உருவெடுக்க முடியாது. துரதிருஷ்டவசமாக அத்தகைய அபாயகரமான சூழலை நோக்கிதான் நம்தேசம் சென்று கொண்டு இருக்கிறது.

இந்த குடியரசு தினநாளில் நம்மண்ணை வளமாக வைத்து கொள்ளவும், இந்த தலைமுறைக்கும், அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் நலமான வாழ்வு வழங்கவும் நாம் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News