உள்ளூர் செய்திகள்
கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட காட்சி.

நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய 91 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கம்-குடியரசு தினவிழாவில் கலெக்டர் வழங்கினார்

Published On 2022-01-26 09:11 GMT   |   Update On 2022-01-26 09:11 GMT
நெல்லையில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில் 91 காவலர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.
நெல்லை:

நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை குடியரசு தினவிழா நடந்தது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றினார்.

அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பின்னர் மூவர்ண பலூன்களை கலெக்டர் விஷ்ண பறக்க விட்டார்.


இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 51 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சர் பதக்கமும், நெல்லை மாநகரில் சிறப்பாக பணியாற்றிய 40 போலீஸ் காரர்களுக்கு முதல்&அமைச்சர் பதக்கமும் வழங்கி கவுரவித்தார்.

நெல்லை மாவட்ட வேளாண்மைதுறை சார்பாக 10 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 42 ஆயிரத்து 248 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து காவல்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் சிறப் பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் அரசு அலுவலர்கள் என 306 பேருக்கு  பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.

தேசிய அளவில் கபடிபோட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த நெல்லை மாவட்ட கபடி ‘ஏ’ அணியை சேர்ந்த 9 பேருக்கும், ‘பி’ அணியை சேர்ந்த 10 பேருக்கும், சிறந்த விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கும் என 24 விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.




விழா முடிவில் மாவட்ட கலை பண்பாட்டுக்குழு சார்பாக சிலம்பாட்ட கலைநிகழ்ச்சி, போலீஸ்காரர் வெங்கடாசலம் நிகழ்த்திகாட்டிய யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில் நெல்லை மாநகர போலீஸ்கமிஷனர் துரைக் குமார், டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி பெருமாள், திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா தொற்று காரணமாக அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக விலகலுடன் கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகராட்சி சார்பாக கமிஷனர் விஷ்ணுசங்கர் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றினார். விழாவில் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல நெல்லை மாவட் டத்தில் உள்ள கூடங்குளம் அணு மின்நிலையம், மகேந்திரகிரி விண்வெளி மையம், மற்றும் முக்கிய அலுவலகங்களிலும் தேசிய கொடியேற்றி குடியரசு தினவிழா கொண் டாடப்பட்டது.

Tags:    

Similar News