உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் முருகேஷ் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

திருவண்ணாமலையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

Published On 2022-01-26 14:31 IST   |   Update On 2022-01-26 14:31:00 IST
திருவண்ணாமலையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் கலக்டர் முருகேஷ் கொடியேற்றி நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், போலீசார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன . மேலும் 855 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே, 43 லட்சத்து, 69 ஆயிரத்து 308 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Similar News