உள்ளூர் செய்திகள்
குடியரசு தினத்தையொட்டி திருச்சி விமான நிலையம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

குடியரசு தின விழாவையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு

Published On 2022-01-25 14:58 IST   |   Update On 2022-01-25 14:58:00 IST
நாட்டின் 73 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி:

இந்திய திருநாட்டின் 73-வது குடியரசு   தினம் நாளை (26-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.   இதையொட்டி திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் குடியரசு விழா நடக்கிறது.

விழாவில் கலெக்டர் சிவராசு தேசியக்கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு கட்சிகள், கல்வி நிறுவனங்கள், அமைப்புகள் சங்கங்கள் சார்பில் குடி யரசு தின விழா கொண்டாடப்படுகிறது. 

குடியரசு தினவிழா கொண்டாடப்படுவதையொட்டி மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகரில் 1,500 போலீசாரும், புறநகர் மாவட்டத்தில் 1,000 போலீசாரும் என மொத்தம் 2,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். 

மாநகர், புறநகரில் உள்ள ஓட்டல்கள் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஆகியவற்றில் தங்கியுள்ளவர்கள் விசாரிக்கப்பட்டனர். தங்க வருபவர்களிடம் முறையாக அடையாளம் அட்டை வாங்கி சரிபார்த்த பிறகே அறை கொடுக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோன்று ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம்,கோவில்கள், ஆலயங்கள், மசூதிகள் போன்ற வழிபாட்டு ஸ்தலங்களுக்கும், மத்திய அரசு அலுவலகங்க ளுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

திருச்சி விமான நிலையத்தில், 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய தொழிற் பாதுகாப்பு படையினருடன், திருச்சி மாநகர போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். கார் பார்க்கிங் பகுதியில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர  சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி ரெயில்வே ஜங்சன், காவேரி,   கொள்ளிடம் பாலங்கள், ரெயில் நிலையங்களுக்கும் 24 மணி நேர துப்பாக்கி  ஏந்திய  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து  3 நாட்கள் வரை இந்த தீவிர சோதனை நடைபெறும் என அதிகாரிகள் கூறினர்.

Similar News