உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

முதுமலை: வனத்தை கண்காணிக்க 9 இடங்களில் சோலார் தானியங்கி காமிராக்கள் பொருத்தம்

Published On 2022-01-24 09:26 GMT   |   Update On 2022-01-24 09:26 GMT
காமிராக்கள் அனைத்தும் கிளைன்மார்கன் பகுதியில் உள்ள டவருடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:

நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பக பகுதி உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் சிறுத்தை, யானை, மான், காட்டெருமை உள்பட அதிகளவிலான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. 


சில நேரங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனப்பகுதிகளில் வேட்டை தடுப்பு முகாம் அமைத்து 24 மணி நேரமும் வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் வனத்தை கண்காணிக்கவும், வனத்தீ பரவுவதை அறிந்து தடுக்கவும் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 9 இடங்களில் சோலார் தானியங்கி கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் அனைத்தும் கிளைன்மார்கன் பகுதியில் உள்ள டவருடன் இணைக்கப்பட்டுள்ளது.

காமிராவில் பதிவாகும் காட்சிகளை தெப்பக்காடு கண்காணிப்பு மையத்தில் கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அங்கு வனத்துறை ஊழியர்கள் காமிராவில் பதிவாகும் காட்சிகளை பார்த்து வருகின்றனர். 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தானியங்கி காமிராக்களில் பதிவாகும் காட்சிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவை வனப்பகுதிகளில் வேட்டை மற்றும் வனகுற்றங்கள் ஏற்பாடாமல் தடுக்க மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தனர்.
Tags:    

Similar News