உள்ளூர் செய்திகள்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது.

505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

Update: 2022-01-22 10:09 GMT
வேலூர் மாவட்டத்தில் இன்று 505 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
வேலூர்:

கொரோனா கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. வேலூர் மாவட்டம் முழுவதும் 505 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. வேலூர் மாநகர பகுதியில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று காலை வரை மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தினர்.

வேலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 12 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

இதன்மூலம், இதுவரை 92 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 52 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரு டோஸ் கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 8 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. 

மேலும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. இது தவிர, 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 71, 71 ஆயிரம் சிறுவர்களில், 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத் தப்பட்டுள்ளது.

முதல் தவணை மற்றும் 2-ம் தவணை செலுத் தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News