மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்களா?
பதிவு: ஜனவரி 22, 2022 15:00 IST
கோப்புப்படம்
நெல்லை:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் தற்போது 115 அடிக்கும் மேலாக தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு சுமார் 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் மழைகாலம் முடிந்ததால்,அணைக்கு மிகவும் குறைந்த அளவே தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 45 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மணிமுத்தாறு அணைக்கு கடந்த சில மாதங்களாக தண்ணீர் அதிக அளவில் வந்தததால், மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மணிமுத்தாறு அணைக்கு தற்போது தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் மணிமுத்தாறு அணைக்கு சுற்றுலாப்பயணிகள் சென்று குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளிலும், பாபநாசம் அகஸ்தியர் அருவியிலும் தற்போது சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே மணிமுத்தாறு அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.