உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொத்தமல்லி விலை சரிவால் விவசாயிகள் கவலை

Published On 2022-01-20 11:47 GMT   |   Update On 2022-01-20 11:47 GMT
மல்லி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
திருப்பூர்:

புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்த கொத்தமல்லி பாதிக்கு பாதி மழையால் அழிந்து போன நிலையில் கார்த்திகைப் பட்டத்தில் கணிசமான விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்திருந்தனர். கார்த்திகை மாதத்திற்கு பின் மழை இல்லை.

கொத்தமல்லி வளர்வதற்கு ஏற்ற நல்ல சீதோஷ்ண நிலை நிலவியதால் விளைச்சல் அதிகரித்தது. இந்த ஆண்டு போதிய நீர்வளம் இருப்பதன் காரணமாக கூடுதல் பரப்பளவில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்திருந்தனர்.

மல்லி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. மல்லி ஒரு கட்டு ரூ.5க்கு விலை போகிறது. அறுவடை, வாடகை போன்ற செலவுகளுக்கே விற்கும் பணம் சரியாக போவதால் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News