உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா சேவை பணி- திருப்பூர் ஆசிரியருக்கு கவுரவம்

Published On 2022-01-20 16:57 IST   |   Update On 2022-01-20 16:57:00 IST
ஆசிரியர் பொன்சங்கருக்கு மாவட்ட சாரண முதன்மை ஆணையர் நாகராஜன், மாவட்ட சாரண ஆணையர் பழனிசாமி, செயலாளர் ஆனந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர்:

பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தேசிய தலைமையகம்  பேரிடர் சமயத்தில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும் சாரண ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இதில் தமிழக அளவில் சிறப்பாக பங்காற்றியதற்காக திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாரண ஆசிரியர் பொன்சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பிப்ரவரி 2 முதல் 8 வரை மத்திய பிரதேசத்தில் நடக்கும் ‘இன்டர்நேஷனல் அட்வென்சர்’ நிகழ்ச்சியில் இவர் பங்கேற்க உள்ளார். அவருக்கு மாவட்ட சாரண முதன்மை ஆணையர் நாகராஜன், மாவட்ட சாரண ஆணையர் பழனிசாமி, செயலாளர் ஆனந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News