உள்ளூர் செய்திகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

4 நகராட்சிகள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு

Published On 2022-01-19 10:10 GMT   |   Update On 2022-01-19 10:10 GMT
உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்


தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் ராமநாத புரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும் உள்ளன. நகராட்சிகளில் ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியாகவும், பரமக்குடி, கீழக்கரை, ராமேசுவரம் சாதாரண நகராட்சிகளாகவும் உள்ளன. இந்த 4 நகராட்சிகளும் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 

மாவட்டத்தில் 4 நகராட்சிகளிலும் மொத்தம் 111 வார்டுகள் உள்ளன. அதில் ஆண்கள் 1 லட்சத்து 1,431 பேரும், பெண்கள் 1 லட்சத்து 4,319 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 26 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 5,776 பேர் உள்ளனர்.

ராமநாதபுரம் சிறப்புநிலை நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. அதில், ஆண் வாக்காளர்கள் 28,032 பேரும், பெண்கள் 29,657 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 12 பேரும் என மொத்தம் 57,701 பேர் உள்ளனர்.

ராமேசுவரத்தில் 21 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள் 18,117 பேரும், பெண்கள் 18,163 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும் என மொத்தம் 36,283 வாக்காளர்கள் உள்ளனர்.

கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில், ஆண்கள் 16,243 பேர், பெண்கள் 16,433 பேர், மூன்றாம் பாலினத்தவர் 1 என மொத்தம் 32,677 பேர் உள்ளனர்.

பரமக்குடி நகராட்சியில் 36 வர்டுகள் உள்ளன. இதில் ஆண்கள் 39,039 பேர், பெண்கள் 40,066 பேர், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 79,115 பேர் வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் அபிராமத்தில் மொத்தம் 5,987 வாக்காளர்களும், கமுதியில் 9,905 வாக்காளர்களும், மண்டபத்தில் 13,798 வாக்காளர்களும், முதுகுளத்தூரில் 10,890 வாக்காளர்களும் உள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலத்தில் 11,008 வாக்காளர்களும், சாயல்குடியில் 11,913 வாக்காளர்களும், தொண்டியில் 14,364 வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். மாவட்டத்தில், மண்டபம் பேரூராட்சியில் 18 வார்டுகளும், மற்ற 6 பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளும் உள்ளன. பேரூராட்சிகளில் அபிராமம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் 38,474 ஆண் வாக்காளரும், 39,390 பெண் வாக்காளர் களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 77,865 வாக்காளர்கள் உள்ளனர்.
Tags:    

Similar News