உள்ளூர் செய்திகள்
பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
அரக்கோணம் பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அரக்கோணம்:
கடந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதிக்கு முன்பு தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்கள பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என பூஸ்டர் தடுப்பூசி பெற தகுதி வாய்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
அதன்படி தக்கோலம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வளாகத்தில் பேரிடர் மீட்புப் படை வீரர்களுக்கான கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை தலைமை மருத்துவ அலுவலர் சந்தீப் ராய் தொடங்கி வைத்தார். இதில் அதிகாரிகள், வீரர்கள் கலந்து கொண்டு சுமார் 180 பேர் ஒரு பகுதியானராக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.