உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

திருவண்ணாமலையில் அதிகரிக்கும் கொரோனா பரவல்

Published On 2022-01-19 08:28 GMT   |   Update On 2022-01-19 08:28 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா அதிகரித்துள்ளது ஒரேநாளில் 359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு மேலும் கடந்த 14&ந்தேதி முதல் 18&ந்தேதி வரை முக்கிய வழிபாட்டு மேலும் கடந்த 14&ந்தேதி முதல் 18&ந்தேதி வரை முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. 

இருந்தபோதிலும் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 359 பேருக்கு கொரோனா தொற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்றுவந்த 82 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

இதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் 58 ஆயிரத்து 180 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 55 ஆயிரத்து 329 பேர் குணமடைந்துள்ளனர். 676 பேர் நோய் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 2,175 பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். பொங்கல் பண்டிகை காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகளவில் கூடியதால் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News