உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா விதிகளை மீறிய 10 பேர் மீது வழக்கு

Published On 2022-01-18 14:49 IST   |   Update On 2022-01-18 14:49:00 IST
கொரோனா விதிமுறைகளை மீறி நாடகம் நடத்திய 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள கீழ்மட்டை கிராமத்தில் கடந்த  16-ந்தேதி ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. 

இதனை மீறி நாடகம் நடைபெறுவதாக அனக்காவூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று பார்த்த போது நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  

பின்னர் நாடகம் ஏற்பாடு செய்த  10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News