உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் 105-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர்-ன் திரு உருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் மாவட்டம், மங்கலம் ஊராட்சி-அதிமுக சார்பில் மங்கலம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் 105-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மங்கலம் அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர்-ன் திருஉருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முருகசாமி மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் சுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் சில்வர் சி. வெங்கடாசலம், சிருபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சிராஜ்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஒன்றிய இலக்கிய அணி முன்னாள் செயலாளர் அஸ்கர் அலி, முன்னாள் தொழிற்சங்க செயலாளர் வேட்டுவபாளையம் மணி, மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் முத்துக்குமார், மங்கலம் இளைஞரணி ஜெயம் என்.மகேந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் மங்கலம் கிளை கழக செயலாளர் எம்.ஆர்.எம் சேட், மங்கலம் அ.தி.மு.கவைச் சேர்ந்த நாசர், ஜக்காரியா, குட்டி, சக்திவேல், லாரன்ஸ், ஆனந்தன், செல்வம், பாலு, சாதிக், ராமர், ரபிதீன், பத்மநாபன், சுந்தரமூர்த்தி, பண்ணையார் லோகநாதன் உள்ளிட்ட மங்கலம் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவினாசி ஒன்றியம். பழங்கரை, அவினாசிலிங்கம்பாளையத்தில் கூட்டுறவு சங்க தலைவர் பழங்கரை எ.வி.தனபால் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
இதேபோல் வேலாயுதம்பாளையம், காசி கவுண்டன்புதூர், கருணை பாளையம்,தெக்கலூர், கருவலூர், கணியாம்பண்டி, சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், ஆட்டையாம்பாளையம், சேவூர், நடுவச்சேரி, கருமாபாளையம், துலுக்க முத்தூர், ஆலாம்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் அ.தி.முக.நிர்வாகிகள் மு.சுப்பிரமணி, பழங்கரை ஊராட்சி முன்னாள் தலைவர் செந்தில்குமார், தங்கராசு, மேகலா சண்முகம், எஸ்.ஜெயபால், தம்பிராஜேந்திரன், காவேரி ரமேஷ், சண்முகம், எம்.எஸ்.மூர்த்தி, ராஜசேகர் முஸ்தபா,வி.பி நடராசன் மணி என்கிற சந்திரசேகர் எ.ஆர்.கே.கார்த்திகேயன், மல்லீசுவரன், மகளிரணியினர், எம்.ஜி.ஆர் இளைஞரணியினர் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.