உள்ளூர் செய்திகள்
மர்மமான முறையில் இறந்த ஆடுகள்.

எடப்பாடி அருகே கால்நடைகள் மர்மச்சாவு

Published On 2022-01-17 15:17 IST   |   Update On 2022-01-17 15:17:00 IST
எடப்பாடி அருகே 7 கால்நடைகள் மர்மமான முறையில் இறந்தன.
டப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தூர் ஊராட்சி புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி. இவர் சொந்தமாக ஆடு, மாடு, கோழி வளர்த்து வருகிறார். வழக்கமாக காலையில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் மாலையில் வீடு அருகே உள்ள பட்டியில் அடைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் வீடு திரும்பின. அவை சுப்பிரமணியம் வீட்டு அருகில் உள்ள தொட்டியில் தண்ணீர் குடித்ததாக கூறப்படுகிறது. தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் ஒரு மாடு, 6 ஆடுகள் சுருண்டு விழுந்து துடிதுடித்து இறந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியம் பூலாம்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மர்மமான முறையில் கால்நடைகள் இருந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News