உள்ளூர் செய்திகள்
வள்ளலார்

நாளை தைப்பூச விழா- வள்ளலார் இல்லத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை

Published On 2022-01-17 15:06 IST   |   Update On 2022-01-17 15:06:00 IST
நாளைய தினம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து குறைவான பக்தர்களுடன் வள்ளலார் இல்லத்தில் பூஜைகள் நடைபெறும் என்று நிர்வாகிகள் கூறினர்.
சென்னை:

சென்னை ஏழுகிணறு வள்ளலார் நகர் வீராசாமி தெருவில் வள்ளலார் வசித்த இல்லம் உள்ளது. இங்கு தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வள்ளலார் பிறந்த தினம் மற்றும் தைப்பூசம் ஆகிய நாட்களில் வள்ளலார் இல்லத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்வது வழக்க மாகும்.

நாளை (18-ந்தேதி) தைப்பூசம் அன்று கோவில்களில் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள வள்ளலார் இல்லத்தில் தைப்பூசத்தையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோன பரவலை கருத்தில் கொண்டு வள்ளலார் இல்லத்தில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான பக்தர்களுடன் எளிமையான முறையில் தரிசனத்துக்கான ஏற்பாடுகளை வள்ளலார் இல்ல நிர்வாகிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, “நாளைய தினம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து குறைவான பக்தர்களுடன் வள்ளலார் இல்லத்தில் பூஜைகள் நடைபெறும்” என்று தெரிவித்தனர்.

இல்லத்தில் அமர்ந்து உணவு சாப்பிடுவதற்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் பக்தர்களுக்கு அன்னதானத்தை பார்சலாக வழங்க முடிவு செய்துள்ளோம். வள்ளலார் இல்லத்துக்கு வரும் பக்தர்களுக்கு பார்சல் சாப்பாடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Similar News