உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் கோழிக்கழிவுகளை மீன்களுக்கு உணவாக வழங்கும் திட்ட

Published On 2022-01-17 09:26 GMT   |   Update On 2022-01-17 09:26 GMT
மாநகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் தின மும் 300 கிலோ இறைச்சிக் கழிவுகள் சேகரமாகின்றன.
கோவை:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 100 வார்டுகளில் 5,500&க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு சேகரமாகும் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்து மாநகராட்சி வாகனங்கள் மூலமாக வெள்ளலூர் குப்பை கிடங்குக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் குப்பையின் அளவை குறைக்க மாநகரில் 69 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்க மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டது. 

இதில் தற்போது 25 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதில் 4 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதற்கிடையே மாநகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் இருந்து சேகரமாகும் கழிவுகளில், கோழிக் கழிவுகளை மீன்களுக்கு உணவாக்க மாநகராட்சி சார்பில் திட்ட மிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது:& மாநகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் தினமும் 300 கிலோ இறைச்சிக் கழிவுகள் சேகரமாகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் 500 கிலோவுக்கும் அதிகமான கோழிக் கழிவுகள் சேகரமா கின்றன. இறைச்சிக் கழிவுகளை வாகனங்கள் மூலமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும், குளக்கரைகளிலும் கொட்டிச் செல்வது தற்போது தீவிரக் கண் காணிப்பு மூலமாக தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கழிவுகளை பயனுள்ள வகையில் அழிக்கும் விதமாக, மீன் பண்ணைகளுக்கு கோழிக் கழிவுகளை அளித்து தொழில்நுட்ப எந்திரங்களின் உதவியுடன் அவற்றை மீன்களுக்கு உணவாக மாற்றிட திட்டமிட்டுள்ளோம். விரைவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News