உள்ளூர் செய்திகள்
தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச இணைய வழி பயிற்சி

Published On 2022-01-17 09:24 GMT   |   Update On 2022-01-17 09:24 GMT
வருகிற 20-ந்தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு இலவச இணையவழி பயிற்சி அளிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) 2022-ம் ஆண்டுக்கான ஆண்டுத் திட்டத்தின்படி தொகுதி 2 வருவாய் உதவியாளர், உதவியாளர், எழுத்தர் மற்றும் தொகுதி 4 -இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகளின் வாயிலாக நிரப்பப்படும் காலிப்பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பு முறையே பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அறிவிக்கப்பட உள்ளது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மறு சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்த இலவச இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் வருகிற 20&ம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கி நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 2 மற்றும் தொகுதி 4 தேர்வுகளுக்கு அனுபவமிக்கச் சிறப்பு வல்லுநர்களை கொண்டு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், பாடக்குறிப்புகள் வழங்கப்பட்டு, மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த போட்டித் தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் தங்கள் பெயர் மற்றும் கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 8110919990 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கோ தகவல் அனுப்பி, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றுப் பயனடையலாம். 

மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News