உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் திருப்புதல் தேர்வு

Published On 2022-01-17 09:15 GMT   |   Update On 2022-01-17 09:15 GMT
கொரோனா காரணமாக 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கோவை:

தமிழகத்தில் கொரோனா காரணமாக 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வருகிற 31-ந் தேதி வரை 10,11 மற்றும் 12-ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பதாக நேற்று
தமிழக அரசு அறிவித்துள்ளது. 

வருகிற 19-ந் தேதி முதல் 10,12-ம் வகுப்புகளுக்கு நடக்க இருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தேர்வுகள் குறித்து அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள் ளது. 

இந்தநிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் திருப்புதல் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கீதா கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வருகிற 19-ந் தேதி நடத்தப்பட இருந்தது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து நேரடியாக தேர்வுகள் நடத்த முடியாத நிலையில் உள்ளது. இருப்பினும் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி உள்ளனர். 

எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் மூலமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தேர்வு அட்டவணையின்படி வினாத்தாள் தயார் செய்து மாணவர்களின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அனுப்பி, மாவணர்களை வீட்டில் இருந்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

தேர்வு எழுதிய பின் வினாத்தாளை மாணவர்கள் மீண்டும் வாட்ஸ்அப்பில் அப்லோடு செய்ய வேண்டும். இதனை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்வார்கள். இதனால் மாணவர்களுக்கு தேர்வு எழுதிய அனுபவம் கிடைக்கும். படித்தது வீணாகாது. இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News