உள்ளூர் செய்திகள்
வேலூர் நேதாஜி மைதானத்தில் போலீசாருக்கு இன்று கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

வேலூரில் போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி

Published On 2022-01-17 14:44 IST   |   Update On 2022-01-17 14:44:00 IST
வேலூர் நேதாஜி மைதானத்தில் 200 போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்பினருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே போலீசார் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெரும்பாலான போலீசார் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை. அதைத்தொடர்ந்து இன்று வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போடாத அனைத்து போலீசாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

முகாமில் டாக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் போலீசாரின் பெயர், பணிபுரியும் இடம் ஆகியவற்றை பதிவு செய்து கொண்டு வரிசையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினர்.

இந்த சிறப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Similar News