உள்ளூர் செய்திகள்
சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டு போட்டி

Published On 2022-01-17 09:05 GMT   |   Update On 2022-01-17 09:05 GMT
திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயலில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
நெற்குப்பை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு ஜல்லிகட்டாக இன்று தொடங்கியது.

கலெக்டர் மதுசூதனன் ரெட்டி தலைமையில் அமைச்சர் பெரியகருப்பன் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். கொரோனா தொற்று காரணமாக 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சிராவயல் பொட்டல், கம்பனூர் பரணி கண்மாய், கும்மங்குடி பொட்டல் ஆகிய இடங்களில்  சிவ கங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை,  மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், அறந்தாங்கி திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த 100-க்கும் மேற் பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு  அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

சிராவயலை சுற்றிலும் இருந்து வரும் கண்மாய்களில் அதிகப்படியான தண்ணீர் உள்ள  காரணத்தினால் வயல் வெளிகள் மற்றும் பிற பகுதிகளில் மட்டும் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. 

மஞ்சுவிரட்டு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அசம்பாவிதம் ஏற்படாத நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தலைமை யில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மஞ்சுவிரட்டை பார்ப்பதற்காக ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் திருப்பத்தூரில் இருந்து பிள்ளையார்பட்டி வரை காலை 8 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News