உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டணத்தில் டி.எஸ்.பி. விஜயராகவன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காட்சி

காவேரிப்பட்டணத்தில் ஊரடங்கில் விதிமுறையை மீறிய 30 பேருக்கு போலீசார் அபராதம்

Published On 2022-01-17 09:00 GMT   |   Update On 2022-01-17 09:00 GMT
காவேரிப்பட்டணத்தில் கொரோனா ஊரடங்கின்போது போலீசார் வாகன சோதனை ஈடுபட்டபோது விதிமுறையை மீறி ஊர் சுற்றிய 30 பேருக்கு அபராதம் விதித்தனர்.
காவேரிப்பட்டணம்:

கொரானா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

இதையொட்டி நேற்று முழு ஊரடங்கு முன்னிட்டு காவேரிப்பட்டணம் பகுதியில் உள்ள சேலம் மெயின்ரோடு, பாலக்கோடு சந்திப்பு சாலை, பஸ் நிலையம், உள்ளிட்ட பரபரப்பு மிகுந்த அனைத்து சாலைகளிலும் மருந்து, பால் உள்ளிட்ட கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. 

சேலம் மெயின்ரோடு முழுவதும் தடுப்புகளை அமைத்து கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. விஜயராகவன்  தலைமையில் காவேரிப்பட்டணத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.

காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி,  சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், ராஜா மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

இதில் முகக்கவசம் அணியாமல் சென்றது உள்ளிட்ட விதிமுறைகளை மீறிய 30 பேருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News