கும்மிடிப்பூண்டியில் பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது
பதிவு: ஜனவரி 17, 2022 11:47 IST
கைது
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். போலீசாரை கண்டதும் அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த சிலர் தப்பி ஓடி விட்டனர்.
இருப்பினும், அங்கு பணம் வைத்து சூதாடியதாக கார்த்திகேயன் (வயது 47), முருகன் (53), தனசேகர் (38), அயூப்கான் (52) மற்றும் செல்வம் (60) ஆகிய 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரொக்கப் பணம் ரூ.25 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.