உள்ளூர் செய்திகள்
முழு ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் சாலையில் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கால் “களை’’ இழந்த காணும் பொங்கல் கொண்டாட்டம்

Published On 2022-01-16 08:22 GMT   |   Update On 2022-01-16 08:22 GMT
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் காணும் பொங்கல் கொண்டாட்டம் “களை’’ இழந்தது.
திருவண்ணாமலை:-

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 2-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டது.
திருவண்ணாமலையில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடியது. ஆரணி, செய்யாறு, வந்தவாசி, போளூர், செங்கம் பகுதிகளும் வெறிச்சோடியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி மகிழ்வார்கள்.  இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான காணும் பொங்கல் விழா இன்று நடைபெறும் நிலையில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இதனால் பொதுமக்கள் காணும் பொங்கலை கொண்டாட முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. 

ஆண்டுதோறும் குடும்பத்துடன் கோவில் மற்றும் சுற்றுலா இடங்களான பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று உணவுகளை எடுத்துச் சென்று உண்டு மகிழ்வார்கள். 

மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கு வார்கள். பல்வேறு அமைப்புகள் சார்பிலும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் களைகட்டும். 

ஆனால் இந்த ஆண்டு காணும் பொங்கலை கொண்டாட வெளியில் செல்ல முடியாது என்பதால் சிறுவர் சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் இழந்து காணப்படுகின்றனர்.

திருப்பத்தூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக எந்த நேரமும் பொதுமக்கள் கூட்டமாக காணப்படும் ஆலங்காயம் மெயின் ரோடு, பஸ் நிலையம், சின்னக்கடை தெரு, பெரிய தெரு, ஆகிய பகுதிகளில்வெறிச்சோடி உள்ளது.

சாலைகள் பொது மக்கள் நடமாட்டத்தை தடுக்கவும் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீசார் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்துள்ளனர். 

அவ்வழியாக வருபவர்களை விசாரித்து  அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வருபவர்களை செல்ல அனுமதி அளித்தனர். தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இதேபோல் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், கந்திலி, உமராபாத் உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஊரங்கால் சாலைகள் வெறிச்சோடியது. போலீசார் கண்காணித்து வந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கால் ராணிப்பேட்டை, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், பனப்பாக்கம், பாணாவரம் பகுதிகளில் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. 

போலீசார் முக்கிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News