உள்ளூர் செய்திகள்
நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி ரெயில்வே நுழைவு பாலத்தில் மோதி நின்ற காட்சி

மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பாலத்தில் மோதி நின்ற லாரி - போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-01-10 15:52 IST   |   Update On 2022-01-10 15:52:00 IST
மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பாலத்தில் லாரி மோதியதால் ஈரோடு - கரூர் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி அருகே உள்ள கேட்டுபுதூரில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது. இந்த ரெயில்வே நுழைவு பாலம் வழியாக சிதம்பரத்தில் இருந்து கணபதிபாளையத்திற்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.

அப்போது பாலத்தின் நுழைவு வாயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பில் மோதி நின்றது. இதனால் லாரி தொடர்ந்து செல்ல முடியவில்லை.

இதனால் ஈரோடு - கரூர் செல்லும் கனரக வாகனம் மற்றும் பஸ் ஆகியவை மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. ரெயில்வே நுழைவு பாலத்தில் மோதி நின்ற லாரியை மீட்கும் பணியில் மொடக்குறிச்சி போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Similar News