உள்ளூர் செய்திகள்
மீனவர்கள் வலையில் சிக்கிய சிங்கி இறால்
அமிர்தராஜ் என்பவரின் வலையில் 4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் என்ற லாஸ்டர் இறால் சிக்கியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி தளத்திலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தினம்தோறும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.
அதன்படி மீன்பிடித்து விட்டு மீண்டும் கரைக்கு திரும்பிய பொழுது அமிர்தராஜ் என்பவரின் விசைப்படகு வலையில் 4 கிலோ எடை கொண்ட சிங்கி இறால் என்ற லாஸ்டர் இறால் சிக்கியது.
கைட்டின் மற்றும் கைட்டோசன் போன்ற வேதிப்பொருட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட சிங்கி இறாலின் விலை சர்வதேச அளவில் ஏறுமுகமாகவே உள்ளது.
வளரும் நாடுகளில் சிங்கி இறாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் இதன் விலையும் அதிகமாகவே உள்ளது.
1 கிலோ 3000 முதல் 5000 வரை விலை போகும் என மீனவர்கள்
தெரிவித்தனர். இந்த இறாலை சக மீனவர்கள் ஆர்வத்துடன்
பார்த்து சென்றனர்.