உள்ளூர் செய்திகள்
ஊரடங்கைமீறி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை ஈரோடு கருங்கல்பா

ஊரடங்கில் வெளியே சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்

Published On 2022-01-09 13:15 IST   |   Update On 2022-01-09 13:15:00 IST
முழுஊரடங்கில் வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
ஈரோடு:

முழுஊரடங்கில் வெளியே சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

முழுஊரடங்கையொட்டி இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, பவானி லட்சுமி புரம் சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, நொய்யல் ஆற்று சோதனைசாவடி என 14 சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனங்கள் மட்டும் கடும் சோதனைக்கு பிறகு மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

இதேப்போல் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு வருபவர்கள் வாகனங்களும் திருமண அழைப்புதலுடன் வந்ததால்  அனுமதிக்கப்பட்டன. 

இதுதவிர தேவையின்றி வெளிய சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு  அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்களை பறிமுதல் செய்தனர். 

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், ஜி.எச். ரவுண்டானா, காளைமாடு சிலை, ஸ்வஸ்திக் கார்னர் போன்ற முக்கியமான சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். சில வாகன ஓட்டிகளை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள மேம்பா லங்களை போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர். முக்கியமான கடைவீதி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

இதேபோல்  மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Similar News