உள்ளூர் செய்திகள்
நாகை மாவட்டத்தில் அறுவடை செய்த நெல்.

நாகை மாவட்டத்தில் சம்பா அறுவடை மும்முரம்

Published On 2022-01-08 15:09 IST   |   Update On 2022-01-08 15:09:00 IST
நாகை மாவட்டத்தில் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி அறுவடை செய்யும் பணி தொடங்கியது நாகப்பட்டினம் மாவட்டத்தில் 65,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர் பயிரிடப்பட்டு இருந்த நிலையில் பல இடங்களில் மழை வெள்ளத்தால் பயிர்கள் சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

எஞ்சிய சம்பா பயிர்களை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல், ஒரத்தூர், ஆவராணி, புதுச்சேரி. கரையிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் 
எந்திரம் மூலமாக அறுவடை செய்யும் பணியினை 
தொடங்கியுள்ளனர். 

இம்மாதம் 10 மட்டும் 12-ந்தேதிகளில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து அவசர அவசரமாக அறுவடை செய்யும் பணியினை நாகை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். 

அதேசமயம் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் மூட்டை ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யவேண்டிய சம்பா நெல்லை தனியார் வியாபாரிகள் 
900 ரூபாய்க்கும், சிலர் 950 ரூபாய்க்கும் கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் மூட்டை ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுவதாக வேதனை தெரிவித்து விவசாயிகள் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News