உள்ளூர் செய்திகள்
தற்கொலை

தாம்பரம் அருகே மகனை கொன்று தாய் தற்கொலை

Published On 2022-01-07 15:41 IST   |   Update On 2022-01-07 15:41:00 IST
தாம்பரம் அருகே மகனை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

தாம்பரம் அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் 8வது தெரு கிருஷ்ணா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரேம்குமார் (வயது 45). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம்போல் நேற்று காலை பணிக்கு சென்றுவிட்டு இரவு தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவை தட்டியபோது யாரும் கதவைத் திறக்கததால் நீண்டநேரம் தட்டிப் பார்த்துவிட்டு பின்பு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது மனைவி சுகாசினி  மற்றும் 11 வயது மகன் பிரணித் ஆகியோர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்து உள்ளனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிரேதத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். போலீசாரின் விசாரணையில் பிரேம்குமாரின் மனைவி சுகாசினி கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தால் அவர்  சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தாயும் மகனும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News