உள்ளூர் செய்திகள்
தேசிய அளவில் யோகா போட்டியில் சாதனை படைத்த மாணவர் கபிலனை பள்ளி நிர்வாகக்குழுவினர் பாராட்டிய காட்சி.

தேசிய யோகா போட்டியில் கரூர் மாணவர் தங்கம் வென்று சாதனை

Published On 2022-01-06 13:25 IST   |   Update On 2022-01-06 13:25:00 IST
தேசிய அளவிலான யோகாசன போட்டிகளில் பங்கேற்று 2 தங்கப்பதக்கங்களை வென்று கரூர் பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
கரூர்: தேசிய யோகாசன விளையாட்டு ஆணையத்தால் தேசிய அளவிலான யோகா போட்டி 17.12.2021 முதல் 19.12.2021 வரை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள லகுலிஷ் யோகா பல்கலைக்கழகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர் கபிலன் முதலிடம் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.
இதேபோல் யோகா பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான 46-&வது சப்- ஜூனியர் மற்றும் ஜூனியர் தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டிகள் 25.12.2021 முதல் 28.12.2021 வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியிலும் பரணி பார்க் பள்ளி மாணவர் கபிலன் முதலிடம் பெற்று தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.
தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த மாணவர் கபிலனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பரணி பார்க் கல்விக்குழும தாளாளர் மோகனரெங்கன், சாரணர் இயக்க மாநில உதவி செயலாளர், மனோகரன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், பரணி பார்க் கல்விக்குழும முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் சுபாஷினி, பரணி வித்யாலயா பள்ளியின் முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் பள்ளியின் முதல்வர் சேகர், யோகா ஆசிரியை ராணி, இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Similar News