உள்ளூர் செய்திகள்
விபத்தில் சிக்கிய வேனின் முன்பகுதி சேதமானது.

விபத்தில் டிரைவர் பலி

Published On 2022-01-05 15:26 IST   |   Update On 2022-01-05 15:26:00 IST
சித்தோடு பகுதியில் இன்று காலை கண்டெய்னர் லாரி, வேன் மோதிய விபத்தில் சேலத்தைச் சேர்ந்த டிரைவர் பலியானார்.
சித்தோடு:

சித்தோடு பகுதியில் இன்று காலை கண்டெய்னர் லாரி, வேன் மோதிய விபத்தில் சேலத்தைச் சேர்ந்த டிரைவர் பலியானார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலூக்கா பாலிகாடு காலனியை சேர்ந்தவர் முருகேசன் (40). வேன் டிரைவர். இவர் இன்று காலை திருப்பூரில் இருந்து சேலம் நோக்கி லோடு ஏற்றிக்கொண்டு வந்தார்.

காலை 6 மணி அளவில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு அருகில் உள்ள ஒரு கடையில் டீ குடித்தார். பின்னர் வேனை எடுத்து கொண்டு சேலம் நோக்கி புறப்பட்டார். 

அப்போது ஒரு கண்டெய்னர் லாரி ஈரோட்டுக்கு செல்ல சாலையை கடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரி-வேன் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வேனின் முன்பகுதி சேதமடைந்து டிரைவர் முருகேசனின் இரண்டு கால்களும் லாரிக்குள் சிக்கிக் கொண்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக டிரைவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே வேன் டிரைவர் முருகேசன் இறந்து விட்டார்.

இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரைவர் யூசப் (36) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News