உள்ளூர் செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

சட்டசபைக்கு வந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Published On 2022-01-05 11:10 IST   |   Update On 2022-01-05 11:10:00 IST
கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் சட்டசபை கூட்டத்துக்கு வந்த உதயநிதி ஸ்டாலினை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
சென்னை:

சட்டசபை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில் அமைச்சர்கள் செல்வதற்கு தனிவழியும், எம்.எல்ஏ.க்கள் செல்வதற்கு தனி வழியும் உள்ளது.

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு காரில் வந்து இறங்கினார். அவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் வந்தார்.

அப்போது வாசல் அருகில் நின்ற 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்றனர். சால்வையும் அணிவித்தனர். பின்னர் அனைவரும் சட்டசபைக்குள் ஒன்றாக சென்றனர்.

Similar News