உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அழைத்து வரும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அழைத்து வரும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அழைத்து வரும் பஸ், வேன் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
அதன்படி நடப்பாண்டு ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் ஆய்வு இன்று ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள ஏ.இ.டி. பள்ளி மைதானத்தில் நடந்தது.
இதில், ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை பகுதியில் என மொத்தம் 666 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டது.
ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா வாகனங்களை ஆய்வு செய்தார். வாகன ங்களில் தரமான டயர் மாட்டப்பட்டுள்ளதா? டிரைவர் லைசன்ஸ் சரியாக உள்ளதா? ஆர்.சி.புக் முறையாக உள்ளதா? வாகனங்களில் மருத்துவ உபகரணங்கள் உள்ளதா? ஜி.பி.எஸ் கருவி சரியாக செயல்படுகிறதா? வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதா? அவசரகால வழிகள் முறையான வேலை செய்கிறதா? என ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஒரு சில வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை அடுத்து சான்றிதழ் வழங்கப்பட்டது.