உள்ளூர் செய்திகள்
சாலையில் தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல்
ஆரணியில் தடுப்பு சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி:
ஆரணி டவுன் ஆரணி, போளூர் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பகுதியில் சாலையின் குறுக்கே அகலம் குறைவாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் தடுப்பு சுவர் அமைக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்றதால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி டவுன் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.