உள்ளூர் செய்திகள்
சிறுத்தை கூண்டில் சிக்கியது

தாளவாடி அருகே ஒரு வருடமாக போக்கு காட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

Published On 2022-01-04 12:25 IST   |   Update On 2022-01-04 12:25:00 IST
குருபரகுண்டி கல்குவாரில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 10 நாட்கள் முன்பு கூண்டு வைத்தனர். இதனையடுத்து இன்று காலை வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கி இருந்தது தெரியவந்தது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திக்கு உட்பட்ட ஜீர்கள்ளி வனச்சரத்தில் ஏராளமான புலி, சிறுத்தை, மான், யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது.

இந்நிலையில் புலி, சிறுத்தைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகிறது. குறிப்பாக அருள்வாடி, சொத்தன்புரம், குருபர குண்டி பகுதியில் கடந்த 1 வருடமாக ஆடு, நாய்களை வேட்டையாடி வந்தது.

இந்நிலையில் குருபரகுண்டி கல்குவாரில் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கடந்த 10 நாட்கள் முன்பு கூண்டு வைத்தனர். இதனையடுத்து இன்று காலை வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது சிறுத்தை கூண்டில் சிக்கி இருந்தது தெரியவந்தது.

கூண்டில் சிக்கிய சிறுத்தை 4 வயதுள்ள ஆண் சிறுத்தை என்றும், பிடிபட்ட சிறுத்தை அதிகாரிகள் ஆலோசனைபடி அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த 1 வருடமாக பொதுமக்கள் மற்றும் வனத்துறைக்கு போக்குகாட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் அப்பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Similar News