உள்ளூர் செய்திகள்
அந்தியூர் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள வெற்றிலைகள்.

வெற்றிலை விலை உயர்வு

Published On 2022-01-03 15:33 IST   |   Update On 2022-01-03 15:33:00 IST
அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமக வெற்றிலை வெடிப்பு தன்மை குறைந்து விட்டது (வெற்றிலை உற்பத்தி). இதனால் விற்பனைக்காக குறைந்த அளவிலேயே வெற்றிலை கொண்டு வரப்படுகிறது
 அந்தியூர்:

அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமக வெற்றிலை வெடிப்பு தன்மை குறைந்து விட்டது (வெற்றிலை உற்பத்தி). இதனால் விற்பனைக்காக குறைந்த அளவிலேயே வெற்றிலை கொண்டு வரப்படுகிறது.

திருமணம் மற்றும் விசேஷங்களில் மங்கள பொருளாக வெற்றிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திருமணம் மற்றும் பண்டிகை காலங்களில் வெற்றிலை விற்பனை அதிக அளவில் இருக்கும். இதனால் விலையும் உயர்ந்து இருக்கும்.
 
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வெற்றிலை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்தியூர் பகுதியில் தவிட்டுப்பாளையம், புதுக்காடு, காந்திநகர், கள்ளிமடைக்குட்டை உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு சாகுபடியாகும் வெற்றிலை விற்பனைக்காக வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அந்தியூர் சந்தைக்கு கொண்டு வரப்படும். இந்த வெற்றிலையை ஈரோடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும் வந்து வாங்கி செல்வார்கள்.

தற்போது அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமக வெற்றிலை வெடிப்பு தன்மை குறைந்து விட்டது (வெற்றிலை உற்பத்தி). இதனால் விற்பனைக்காக குறைந்த அளவிலேயே வெற்றிலை கொண்டு வரப்படுகிறது.

இதனால் விலையும் உயர்ந்து விட்டது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு கட்டின் (கவலி) ரூ.15 முதல் 25 வரை விற்பனையானது. தற்போது ரூ.50 முதல் 60 வரை விற்பனையாகிறது. 

இதுகுறித்து வெற்றிலை விவசாயிகள் கூறும்போது, திருமணம் மற்றும் பண்டிகை விசேஷ நாட்களில் மட்டுமே வெற்றிலை அதிகவிலைக்கு விற்கப்படும். மற்ற நேரங்களில் விலை குறைவாகத்தான் விற்கப்படும். 

தற்போது பனியின் காரணமாக வெற்றிலை விளைச்சல் குறைந்து விட்டதால் விலை உயர்ந்து விட்டது என்றனர்.

இன்று திங்கட்கிழமை அந்தியூர் சந்தைக்கு குறைந்த அளவிலேயே விற்பனைக்கு வெற்றிலை கொண்டு வரப்பட்டது.

Similar News