உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மழையால் அறுவடை பணிகள் பாதிப்பு

Published On 2022-01-03 06:27 GMT   |   Update On 2022-01-03 06:27 GMT
விவசாயிகள் அறுவடை திருநாளான தை பொங்கல் கொண்டாட தற்போது அறுவடை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:

புரட்டாசி பட்டத்தில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் சோளம், கம்பு உள்ளிட்ட மாட்டுத்தீவன பயிர்களை சாகுபடி செய்தனர். தற்போது அறுவடை சீசன் காலமாகும். விவசாயிகள் அறுவடை திருநாளான தை பொங்கல் கொண்டாட தற்போது அறுவடை பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாக மார்கழி, தை மாதங்களில் மழை இருக்காது. வறண்ட வானிலையே காணப்படும். இந்த நேரத்தில் அறுவடை செய்த பயிர்களை வெயிலில் காயவைத்து பதப்படுத்தி இருப்பு வைப்பர்.

இது கால்நடைகளுக்கு அடுத்து வரும் கோடை கால தீவன தட்டுப்பாட்டை சமாளிக்க உதவிகரமாக இருக்கும்.அறுவடை செய்து நிலத்தில் காய வைக்கப்பட்டிருக்கும் தீவனப்பயிர்கள் இந்த மழையால் பாதிப்படையும். இது கால்நடை விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News