உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2022-01-02 08:34 GMT   |   Update On 2022-01-02 08:34 GMT
ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு திடீரென பலத்த மழை கொட்டியது. சுமார் 1 மணி நேரம் பெய்த மழை இரவு வரை தூறி கொண்டே இருந்தது.

இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. 

ஈரோடு மாநகர் பகுதிகளில்  வளர்ச்சிதிட்ட பணிகள் நடந்து வருவதால் ரோடுகள் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

கவுந்தப்பாடி பகுதியில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. தொடர்ந்து இரவு 9 மணி முதல் 10 மணி வரை பரவலாக மழை பெய்தது. பெருந்துறை பகுதியில் சாரல் மழைதூறி கொண்டே இருந்தது.

இதே போல் கோபி, சத்தி, பவானி,  சென்னிமலை, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
Tags:    

Similar News