உள்ளூர் செய்திகள்
பாத்திரங்களில் தண்ணீர் தேக்கி வைத்தால் ரூ.500அபராதம்
தண்ணீர் தேக்கி வைத்து அதில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் நகராட்சி அகலரப்பாளையம் புதூரில் டெங்கு தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டினுள் பாத்திரத்தில் 4 நாட்களுக்கு மேல் தண்ணீர் நிறைத்து வைத்திருந்ததாக நகராட்சி நிர்வாகம் ரூ.500 அபராதம் விதித்தனர்.
இதுகுறித்துநகராட்சி கமிஷனர் மோகன்குமார் கூறுகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உட்புறமும் குளிர்சாதன எந்திரம், பிரிட்ஜ் மற்றும் வீட்டின் வெளிப்புறம் கீழ்நிலைத் தொட்டி, மேல்நிலை தொட்டி, டயர், தேங்காய் தொட்டி மற்றும் தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீர் தேக்கி வைத்து அதில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அபராதத்தொகை ரூ.500 முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.