உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் 543 மையங்களில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16 கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 16 கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 17&வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 543 மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாமல் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் 2&ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு மாநகர பகுதியில் வழக்கம் போல் 50 இடங்களிலும், நடமாடும் வாகனங்கள் மூலமும் தடுப்பூசி போடும் பணி நடக் கிறது.
இந்த பணியில் மாவட்டம் முழுவதும் 2172 பணியாளர்களும், 66 வாகனங்களும் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&
ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். வரும் 3&ந் தேதி முதல் 15 வயது முதல் 18 வயதுடையவர்களுக்கு அதாவது 2007&ம் வருடம் பிறந்தவர்கள் மற்றும் அதற்கு முன்னதாக பிறந்தவர்களுக்கும் கோவேக்சின் தடுப்பூசி கல்வி நிறுவனங்களில் செலுத்தப்பட உள்ளது.
மேலும் தற்போது புதிதாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் தடுப்பூசி அவசியம். எனவே நாளை நடை பெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில் மக்கள் கலந்து கொண்டு இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் அச்சமின்றி தயக்கமின்றி தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.