உள்ளூர் செய்திகள்
ஐயப்ப பக்தர்களுக்கு மாநில எல்லையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட போது எடுத்த படம்.

ஆந்திராவில் இருந்து வருபவர்களுக்கு மாநில எல்லையில் கொரோனா பரிசோதனை

Published On 2021-12-30 13:29 IST   |   Update On 2021-12-30 13:29:00 IST
ஆந்திராவில் இருந்து வருபவர்களுக்கு காட்பாடியில் மாநில எல்லையில் சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
காட்பாடி:

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஒமைக்ரான் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநில எல்லைகளையும் சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

காட்பாடியில் வெடிமருந்துத் தொழிற்சாலை அருகே உள்ள மாநில எல்லையில் ஆந்திராவிலிருந்து வருபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. நேற்று சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த அய்யப்ப பக்தர்கள் குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வாகனங்களில் வருபவர்கள் 2 கட்ட கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்யப்படுபவர்களின் முகவரி மற்றும் அவர்களுடைய செல்போன் எண்கள் பதிவு செய்யப்படுகிறது.

2 தவணை தடுப்பூசி போட்டிருந்தாலும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். கடைகள் மற்றும் பொது இடங்களில் கூடும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

ஒமைக்ரான் கொரோனாவை விட அதிக வேகத்தில் பரவக் கூடும் என்பதால் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

Similar News