உள்ளூர் செய்திகள்
ஜி.கே.வாசன்

துப்பாக்கி சுடும் பயிற்சியில் குறைபாட்டை தவிர்க்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2021-12-30 13:03 IST   |   Update On 2021-12-30 13:03:00 IST
காவல்துறையினர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டால் அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் நாரத்தாமலை அருகே காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது வீட்டில் இருந்த சிறுவன் மீது குண்டு பாய்ந்ததால் சிறுவனின் பெற்றோர் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள். அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காவல்துறையினர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டால் அதற்குண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடைபெற வேண்டும்.

இது போன்ற ஒரு அஜாக்கிரதையான சம்பவம் இனிமேல் நடைபெறக்கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைய வேண்டும்.

குண்டு பாய்ந்து, பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் சிறுவன் புகழேந்திக்கு உயர்தர சிகிச்சை அளித்து, நல்ல உடல்நலத்துடன் மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News