உள்ளூர் செய்திகள்
தேவகோட்டை அருகே தனியார் மில் வேன் விபத்து- 14 பெண்கள் காயம்
தேவகோட்டை அருகே தனியார் மில் வேன் விபத்துக்குள்ளானத்தில் 14 பெண்கள் படுகாயமடைந்தனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தில் உள்ள தனியார் நூற் பாலையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை அந்த நிறுவனம் வேன் மற்றும் கார்களில் அழைத்து வந்துள்ளது.
இந்தநிலையில் காளையார்கோவில் கொல்லங்குடி பையூர் பகுதிகளைச் சேர்ந்த 14 பெண்கள் உள்பட 15 பேர் நேற்று பணி முடிந்து இரவு வீடுகளுக்கு வேனில் சென்றனர். அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து தேவகோட்டை ஜீவா நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கீழே பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் வந்தவர்கள் காயமடைந்தனர். அவர்கள் முதலுதவி சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஒரு ஆண் உட்பட 9 பெண்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.