உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பி.ஏ.பி., வாய்க்கால்களை சுத்தம் செய்யும் விவசாயிகள்

Published On 2021-12-29 13:19 IST   |   Update On 2021-12-29 13:19:00 IST
தண்ணீர் கடைமடை வரை செல்வதில் சிக்கல் ஏற்படும் என்று கருதி விவசாயிகள் களத்தில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:

பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்திற்கு திருமூர்த்தி அணையில் இருந்து ஒன்றரை நாள் தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 94 ஆயிரத்து 521 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

கடந்த ஆண்டில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே குடிமராமத்து திட்டத்தின் கீழ் பிரதான வாய்க்கால், கிளை வாய்க்கால் உள்ளிட்டவை தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் தண்ணீர் சேதாரமின்றி கடைமடை வரை செல்வது உறுதி செய்யப்பட்டது.

தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் பணி மேற்கொள்ளவில்லை. இதனால் பிரதான வாய்க்கால் மற்றும் கிளை வாய்க்காலில் புல், பூண்டுகள் முளைத்துள்ளது. 

இதனால் தண்ணீர் கடைமடை வரை செல்வதில் சிக்கல் ஏற்படும் என்று கருதி விவசாயிகள் களத்தில் இறங்கி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் இருந்து பிரியும் கிளை வாய்க்கால்களை மட்டுமே நாங்கள் சுத்தம் செய்து வருகிறோம். அதற்கு மேல் பகுதியில் உள்ளதை அரசுதான் சுத்தப்படுத்த வேண்டும். ஆனால் இந்த ஆண்டு அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் தண்ணீர் சேதம் அதிகமாகும் என்றனர்.

Similar News