உள்ளூர் செய்திகள்
31-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து தக்க நிவாரணம் பெறலாம்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை )காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலை மையில் நடைபெறுகிறது. மாவட்டத்தின் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்குபெறும் இந்த கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து தக்க நிவாரணம் பெறலாம். இந்த தகவலை கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஷர்மிளா தெரிவித்துள்ளார்.