உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அசாம் - கொச்சுவேலி சிறப்பு ரெயில் திருப்பூரில் நின்று செல்லும்

Published On 2021-12-24 11:59 IST   |   Update On 2021-12-24 11:59:00 IST
சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையில் நின்று பாலக்காடு வழியாக கேரள மாநிலம் கொச்சுவேலியை சனிக்கிழமையை சென்றடையும்.
திருப்பூர்:

அசாம் மாநிலம் கமக்யாவில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் கோவை மற்றும் திருப்பூரில் நிற்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க அசாம் மாநிலம் கமக்யாவில் இருந்து வியாழன் தோறும் வாராந்திர ரெயில் இயக்கப்பட உள்ளது. 

நேற்று காலை 7:40 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரெயில் வடமாநிலங்களில் பயணித்து ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டா வழியாக தமிழகத்தின் காட்பாடி வரும். பின்னர் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையில் நின்று பாலக்காடு வழியாக கேரள மாநிலம் கொச்சுவேலியை சனிக்கிழமையை சென்றடையும் .

வருகிற 30-ந்தேதி, ஜனவரி 6 மற்றும் 13-ந்தேதி இந்த ரெயில் இயங்கும். திருப்பூருக்கு சனிக்கிழமை காலை 9:45 மணிக்கு வரும். மறுமார்க்கமாக ஞாயிறுதோறும் (26-ந்தேதி) கொச்சுவேலியில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்படும் ரெயில் புதன்கிழமை இரவு கமக்யா சென்றடையும். 

ஜனவரி 2 மற்றும் 9, 16 ந்தேதி இந்த ரெயில் இயங்கும். திருப்பூரை திங்கட்கிழமை காலை 5.05மணிக்கு கடக்கும். 6 ஏ.சி., பெட்டி, 10 படுக்கை வசதி, 3 அமரும் முன்பதிவு பெட்டி உள்ளிட்ட 20 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில் முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News