உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சேவை- கட்டுமான தொழிலாளர்கள் வலியுறுத்தல்

Published On 2021-12-23 13:31 IST   |   Update On 2021-12-23 13:31:00 IST
கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு தொழிற்சங்க அமைப்பு உறுப்பினர்களுக்கு சொந்த வீடு அமைத்துத் தரவேண்டும்.
உடுமலை:

உடுமலையில் தென்னிந்திய விஷ்வகர்மா கட்டுமான அமைப்பு சாரா தொழிற்சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. 

கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ,கோவை மாவட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு தொழிற்சங்க அமைப்பு உறுப்பினர்களுக்கு சொந்த வீடு அமைத்துத் தரவேண்டும். 

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பொதுச்செயலாளர் துரை சண்முகம். மாநில பொருளாளர் அரசப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். 

Similar News