உள்ளூர் செய்திகள்
பொங்கல் பண்டிகை - கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்
கடந்த ஆண்டு இறுதி மற்றும் நடப்பாண்டு தொடக்கத்தில் பல 100 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி நடந்தது.
மடத்துக்குளம்:
மடத்துக்குளம் அமராவதி பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதியில் ஆண்டு தோறும் 1,500 ஏக்கருக்கும் கூடுதலாக கரும்பு சாகுபடி நடக்கிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. இது தவிர வெல்லம் உற்பத்திக்கும் அறுவடை செய்யப்படுகிறது.
இந்த அடிப்படையில் கடந்த ஆண்டு இறுதி மற்றும் நடப்பாண்டு தொடக்கத்தில் பல 100 ஏக்கர் பரப்பில் கரும்பு சாகுபடி நடந்தது. தற்போது வேடபட்டி, துங்காவி, கொமரலிங்கம் பகுதியில் வெல்லம் உற்பத்தி நடக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறிய வெல்லம், உருண்டை வெல்லம் தயாரிக்க நீலம்பூர் உள்ளிட்ட பகுதியில் கரும்பு அறுவடை நடக்கிறது.