உள்ளூர் செய்திகள்
தேவகோட்டை அருகே சாலை விபத்தில் கலெக்டரின் பாதுகாப்பு போலீஸ்காரர் பலி
தேவகோட்டை அருகே சாலை விபத்தில் கலெக்டரின் பாதுகாப்பு போலீஸ்காரர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை டாக்டர் ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் முகம்மது மீரா பாஜித் (வயது23). இவர் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனனின் பாதுகாப்பு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு தேவகோட்டையில் இருந்து காரைக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு திருச்சி-ராமேசுவரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது நாய் குறுக்கே பாய்ந்ததால் நிலைதடுமாறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஆறாவயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.